Friday, 25 October 2013

சித்தர்களின் மருத்துவ முறை

எல்லாம் வல்ல விநாயகருக்கும், நம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் முதல் நன்றி !

குருவடி சரணம் – திருவடி சரணம்
இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பிரபலமாக வளர்ந்து கொண்டிருக்கும் மூன்று முக்கிய நோய்களுக்கு ஒரே மருந்தின் மூலம் சராசரியாக 48 நாட்களில் குணப்படுத்தலாம்.  நோய்களின் ஆரம்ப வேரை கண்டறிந்து அதை நீக்குவதன் மூலம்  பலவிதமான நோய்களை குணப்படுத்தலாம். சித்தர்களின் மருத்துவ முறைப்படி முதலில்  மருந்தாக ” இலையையும் “ ” வேரையும்” கொடுக்க வேண்டும் இது தப்பினால் ரசமும்  சுன்னமும் கொடுக்கலாம். ஒரு மனிதருக்கு ஏன் நோய் வருகிறது என்பதில் தொடங்கி எளிதான மூலிகைகளை கொண்டே நோய்களை நிரந்தரமாக நீக்கும் முறைகள் பல  இருக்கின்றது அந்த வகையில் ஒருவருக்கு வரும் மூன்றுவிதமான நோய்களுக்கும் ஒரே காரணம் தான் அதை நீக்குவதும் எளிது தான் என்கிறார் அகத்தியர். 1.நீரிழிவு, 2. கை கால் வலி, குடைச்சல், கண்பார்வை மந்தம், 3. சிறுநீரகம் பழுது (கிட்னிபெயிலியர்). ஆங்கில மருத்துவத்தில் மூன்றுக்கும் தனித்தனியாக மருந்து கொடுப்பார்கள், கூடவே ஒரு  காரணமும் சொல்வார்கள் நீரிழிவு (சுகர்) வந்தால் மேலே குறிப்பிட்ட நோய்கள் தானாக வந்திடும் இதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி தேவையா என்பார்கள். ஆனால் உண்மையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் சித்தர் அகத்தியர் இந்த நோய்களுக்கு  தனித்தனியாக வைத்தியம் பார்க்க வேண்டாம் ஒரே மருந்தில் நீரிழிவை குணப்படுத்தலாம், கை கால் வலி சரி செய்யலாம் அத்துடன் கண் ஆபரேசன் , கண்ணாடி என எதுவும் வேண்டாம் கண் பார்வை குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தலாம்,சிறுநீரக பாதிப்பையும் குணப்படுத்தலாம் என்று ஒரு பாடலில் குறிப்பிட்டு இருந்தார். உடனடியாக இதே போல் மூன்றுவிதமான நோய் உள்ள ஒருவருக்கு ஒரே ஒரு மூலிகை மருந்து மட்டும் கொடுத்து பார்த்தோம், ஆச்சர்யப்படும் விதம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. விரைவில் அவரின் பேட்டி புகைப்படத்துடன் நம் தளத்தில் வெளியீடப்படும். அந்த அதிசய மூலிகையும் அதை எப்படி , எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதும் விரைவில் தெரியப்படுத்தப்படும்.
முக்கிய அறிவிப்பு.
இயற்கை உணவு உலகமான நம் வலைப்பூவை அனைவருக்கும் எடுத்துச்செல்லும் நோக்கில் இதை ஒரு அமைப்பாக உருவாக்கி ஏழை எளிய மக்கள் பலருக்கும் சேவை செய்ய வேண்டும் என்று பலர் இமெயில் மூலம் கேட்டு இருந்தனர். கடந்த 1 வருடமாக பார்க்கலாம் என்று மட்டுமே சொல்லி வந்தோம், இன்று தான் குருநாதரின் அனுமதி கிடைத்தது. இதுவரை நம்  வலைப்பூவில் இருந்து எவரிடமும் பைசா காசு கூட வசூலிக்கவில்லை. புத்தகத்திலும்  ஏட்டிலும் படித்ததை வைத்து கண்டபடி பிதற்றுவதைவிட ஆராய்ச்சிபூர்வமாக பல விடயங்களை குருவின் அனுமதியோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் நம் நோக்கம். 

1 comment: