Saturday, 16 November 2013

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்

 
 
 ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள
தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்

தேவியின் இம்மூலமந்திரத்தை தினமும் பய பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தை யும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.

பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரீ மஹா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.

ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும்

பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் -
கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் -
ப்ரத் யங்கரே என்று நான்காவது இடைவெளியும் - க்ஷம் - ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம். மூன்று மாத்திரை என்பது மூன்று செகண்டுகள் என்று கொள்ளலாம்.

கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின், இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம். 1. ஜ்ஜம் என்ற சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்திகலையும், 3. கம் என்ற சிருஷ்டி கலையும், 4. த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளது. இந்தக் கலைகள் அக்னி சூரியக் கலைகளில் அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற பெயரை அடைகின்ற தேவி சித்தி, சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர் பெற்று, ஒளி வீசி, பக்த கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரத காளி என்ற திருப்பெயரையும் பெற்று பிரத்தியங்கிரா தேவியாக என்றும் போற்றித் துதிக்கப்படுகிறாள். தனித்து ஏகாந்தமாக புன்னாக மரங்கள் சூழ்ந்த ஸ்தலத்தில் சர்வமங்களம் பொருந்திய காரிண்யை யாக ஒளிவீசுகின்ற மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித்துதித்து புகழும் ,பொருளும் சர்வசம்பத்தும் பெறுவோமாக.

No comments:

Post a Comment