Wednesday, 4 December 2013

ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.

.மூல மந்திரம்


மூல மந்திர மோத லிங்கிலை
        யீவ திங்கிலை நேய மிங்கிலை
        மோன மிங்கிலை ஞான மிங்கிலை  மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
         சார முண்டப ராத முண்டிடு
        மூக என்றொரு பேரு முண்டருள்       பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
        வார்மை யும்பல வாகி வெந்தெழு
        கோர கும்பியி லேவி ழுந்திட          நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
        ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
        கூர்மை தந்தினி யாள வந்தருள்       புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
        சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
        பீதி கொண்டிட வாது கொண்டரு       ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
        மாற னும்பிணி தீர வஞ்சகர்
        பீறு வெங்கழு வேற வென்றிடு        முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
        பாக மொன்றிய வாலை யந்தரி
        ஆதி யந்தமு மான சங்கரி                    குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
        சேவ லங்கொடி யான பைங்கர
        ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள்    பெருமாளே.
-88 பழநி
பதம் பிரித்து உரை


மூல மந்திரம் ஓதல் இங்கு இலை
ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள்

மூல மந்திரம் = மூல மந்திரமாகிய (ஆறெழுத்தை). ஓதல் இங்கிலை = ஓதுவது என்பது என்னிடம் கிடையாது. ஈதல் இங்கிலை =(பிறருக்குக்) கொடுத்தல் என்பதும் என்னிடத்தில் கிடையாது.மோனம் இங்கிலை = மனத்தை அடக்கும் மவுன நிலை என்பது என்னிடம் கிடையாது. ஞானம் இங்கிலை = ஞானம் என்பதும் என்னிடத்தில் இல்லை. மடவார்கள் = மாதர்கள் மீது.

மோகம் உண்டு அதி தாகம் உண்டு
அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத

மோகம் உண்டு = காமம் என்பது என்னிடம் உண்டு. அதி தாகம் =அதில் மிக்க வேட்கை (எனக்கு) உண்டு. அபசாரம் உண்டு = (அதனால் செய்த) அபசாரம் எனக்கு உண்டு. இடு மூகன் என்ற = (எல்லாரும்) இட்ட கீழ்மகன் என்னும். பேரும் உண்டு = பெயரும் எனக்கு உண்டு. அருள் பயிலாத = உனது திருவருளில் பயிலாத.

கோலமும் குண ஈன துன்பர்கள்
வார்மையும் பலவாகி வெந்து எழு
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி

கோலமும் = விளையாட்டுக் கோலமும்.குண ஈன=குணம் இழிவான. துன்பர்கள் = துன்பச் செயலாளர்களின். வார்மையும் =ஒழுக்கமும். பலவாகி = பல கூடி. வெந்து எழு = வெந்து எழுகின்ற. கோர = கோரமான. கும்பியிலே= கும்பிபாகம் என்னும் நரகத்தில்.விழுந்திட = விழுவதற்கே. நினைவாகி = நினைவு கொண்டு.

கூடி கொண்டு உழல்வேனை அன்போடு
ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள் புரிவாயே

கூடு கொண்டு = இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து. உழல்வேனை = திரிகின்ற என் மீது அன்பொடு = அன்பு வைத்து. ஞான நெஞ்சினர் பால் = ஞானம் நிறைந்த மனத்தினருடன் இணங்கிடும் =சேரும்படியான கூர்மை தந்து = நுண்ணறிவை எனக்குத் தந்து. இனி ஆள வந்து = என்னை ஆட்கொள்ள என்னிடம் வந்து. அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.

பீலி வெந்து உயர் ஆலி வெந்து
அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு

பீலி வெந்து = மயில் பீலியும் வெந்து. உயர் ஆல = உயர்ந்த குண்டிகை நீரும் வெந்து கொதித்து. அசோகு வெந்து = அசோகந் தளிர்களும் வெந்து. அமண் மூகர் = (அந்த அவமானத்தால்) சமண்களாகிய ஊமைகள். நெஞ்சிடை பீதி கொண்டிட = மனத்தில் பயம் கொள்ளுமாறு. வாது கொண்டு = வாது செய்து. அருள் எழுது ஏடு = திருவருட் பெருக்கால் (பாசுரம் எழுதிய) ஏடு.

பேணி அங்கு எதிர் அறு சென்றிட
மாறனும் பிணி தீர வஞ்சகர்
பீறு வெம் கழு ஏற வென்றிடு முருகோனே

பேணி = யாவரும் விரும்பும்படி. அங்கு எதிர் ஏறு சென்றிட =(வைகை) ஆற்றில் எதிர்த்துச் செல்லவும். மாறனும் = பாண்டிய மன்னனும். பிணி தீர = நோய் தீர்ந்து குணம் பெறவும். வஞ்சகர் =வஞ்சகர்கள். பீறு = (உடலைக்) கிழிக்கின்ற. வெம் கழு ஏற = கொடிய கழுவில் ஏறவும்.

ஆலம் உண்டவர் சோதி அம் க(ண்)ணர்
பாகம் ஒன்றிய வாலை அந்தரி
ஆதி அந்தமுமான சங்கரி குமரேசா

ஆலம் உண்டவர் = ஆலகால விடத்தை உண்டவரும். சோதி அம் கண்ணர் = முச்சுடர்களை விட அழகிய முக்கண்கள் கொண்டவரும் ஆகிய சிவபெருமானின். பாகம் ஒன்றிய = பாகத்தில் பொருந்திய. வாலை = குமரி. அந்தரி = பராகாச வடிவினள். ஆதி அந்தமுமான =முதலும் இறுதியுமாய் நிற்கும். சங்கரி குமரேசா = சங்கரியின் குமரனே.

ஆரணம் பயில் ஞான புங்கவ
சேவல் அம் கொடி ஆன பைங்கர
ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் பெருமாளே.

ஆரணம் பயில் = வேதங்கள் பயிலும். ஞான புங்கவ = ஞான குருவே.சேவல் அம் கொடி ஆன = அழகிய சேவல் கொடியை ஏந்திய.பைங்கர = திருக் கரத்தனே ஆவினன் குடி வாழ்வு = பழனியில் வாழ்வு கொண்டு. அருள் பெருமாளே = அருள் பாலிக்கும் பெருமாளே.
சுருக்க உரை
நான் மூல மந்திரமாகிய ஆறெழுத்தை ஓதுவது கிடையாது. ஒருவருக்கும் ஈகை செய்வதில்லை. மனத்தில் அன்பும் இல்லை. மவுனமோ, ஞானமோ எனக்குக் கிடையாது. ஆனால் மாதர்கள் மீது மோகம் எனக்கு மிக உண்டு. அபசாரம் மிகச் செய்தவன் நான். எல்லாரும் என்னைக் கீழ்மகன் என்று சொல்லுவதும் சரியே. குணக் கேடர்கள் போகும் கும்பி நரகத்தில் விழுவதற்கே நினைவு கொண்டு, இந்த உடலைச் சுமந்து கொண்டு திரியும் என் மேல் அன்பு வைத்து, இனி என்னை ஆள வந்து அருள் புரிவாயாக.

மயில் பீலியும், தாம் ஏந்திய குண்டிகை நீரும், அசோகந் தளிர்களும் வெந்து, அந்த அவமானத்தால் சமணர்களாகிய ஊமைகள் பயம் கொள்ளுமாறு, சம்பந்தராக வந்து, வாது செய்து, பாசுரங்கள் எழுதிய ஏடுகள் வைகை ஆற்றில் எதிர் ஏற, பாண்டிய மன்னனின் சுரமும், கூனும் நீங்கவும், சமணர்கள் கழு ஏறவும் வெற்றி கொண்ட முருகனே. நஞ்சை உண்ட சிவபெருமான் பாகத்தில் உறையும் சங்கரியின் குமாரனே. வேதங்கள் போற்றும் ஞான குருவே. சேவல் கொடியோனே. பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. ஞானம் நிறைந்த அடியார்களுடன் நான் சேர்ந்து நன்னெறியில் ஒழுக அருள் புரிவாயாக.

குகஸ்ரீ ரசபதி விளக்கவுரை

அமணர் காடு காழியை அடர்ந்தது. அப்பாவத்தால் பாண்டியனை அந்நோய் பாதித்தது. அதைத் தவிர்க் அமணர் எண்ணினர். மந்திரம் கூறி மயிற் பீலியால் மன்னர் உடலை வருடினர். தேகத்தின் மீது கும்பிகை நீரைத் தெளித்தனர். சுர வெம்மையால் சார்ந்த பீலி சாமம்பலாகியது. வளமான கும்பிகை நீர் வற்றியது. கையில் இருந்த அசோக தளிரும் தீந்தது. இறுதியில் திருநீற்றுப் பதிகம் பாடி சுரம் தீர்த்தார் திருஞானசம்பந்தர். கண்ட அமணர் பீதி கொண்டனர். அழிந்தது நமது சமயக் கொள்கை என அலறினர். அருள் நாதம் மெய்மையை அறிவிக்கும். அம்மெய்மையை உள்ளத்தில் அழுத்தி அதை உண்மை ஆக்குவம். உண்மையை வாய் வழி வெளிப்படுத்தி அதை வாய்மை ஆக்குவம். வாய்மையை ஒலி ஆக்குவம். ஒலியை எழுத்தாக்குவோம். எழுத்தை ஏட்டாக்குவோம். தெய்வ அந்த ஏட்டை தீயில் சேர்ப்போம். வேகாத ஏடு வெற்றி பெற்றது என்று வாதத்தை அமணர் வளர்த்தினர். சுர வாதில் தோற்ற அமணர் தூய அனல் வாதிலும் தோற்றனர். மீண்டும் வாதத்தில் முடி சூடலாம் என்று எண்ணினர். புனல் வாதம் செய்வோம், தோற்றவர் கழு ஏற வேண்டும் என்று தம்மைத் தாமே வஞ்சிக்கொண்ட தடுமாற்றத்தால் தம் சமய உண்மை தழுவிய ஏட்டை வெள்ளம் பெருகிய வைகையில் இட்டனர். அந்த ஏட்டை வெள்ளம் அடித்துச் சென்றது.

Ragam Tanam Pallavi

Ragam Tanam Pallavi

Saturday, 16 November 2013

ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் தோற்றம்


ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் தோற்றம்

நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பக்ஷியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பக்ஷிக்கு வைரியாகும். சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள்.

பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும். இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரிய நிறம், நீல ஆடை, சூலம், கபாலம், பாசம், டமருகம் முதலிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவள். சந்திர கலை, கரிய நிறம், நீல ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது. தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான். இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறு வேலை பார்த்தார்.

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஆனந்தம் ப்ரும்ஹனோ வித்வான் ந பிபேதி குதச்சன ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள்.

பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனுகம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம் விதாரய 
- தேவி மஹிம்ன ஸ்தோத்திரம்

ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி


ஓம் சகல நாயகி போற்றி 
ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி 
ஓம் தர்ம பரிபாலதையே போற்றி 
ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி
 ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி
 ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி
 ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி
 ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி
 ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி
 ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி
ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி 
ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி 
ஓம் ஹரத்துள்ளாயே போற்றி
ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி

ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி

 ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி
 ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி
 ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி 
ஓம் சிங்க முகமுடையவலே போற்றி 
ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி 
ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி
 ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி 
ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி
 ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி 
ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி 
ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி

ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி 
ஓம் கர்ணகோர ரூபமே போற்றி
 ஓம் ஞானவழி எழிலே போற்றி 
ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி
ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி
ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி 
ஓம் வாடும் பயிர் காபாயே போற்றி 
ஓம் வானம் பூமி காபாயே போற்றி
ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி
 ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி
 ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி 
ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி 
ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி 
ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி

 ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி 
ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி
ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி
 ஓம் சித்தி வழி சித்தியே போற்றி 
ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி
 ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி 
ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி
ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி
 ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி
 ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி 
ஓம் தயை சுவை மோகனமே போற்றி 

ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி ஓம் பத்ரகாளி வடிவே போற்றி ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி ஓம் சூலினியின் துணையே போற்றி ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி ஓம் மாவீர கோகிலமே போற்றி ஓம் சர்வபாப விநாசனி போற்றி ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி ஓம் உகந்தது தருவாயே போற்றி ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி ஓம் கணித்தது புகுவாயே போற்றி ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி ஓம் ஆபத் சகாயமே போற்றி ஓம் ஆகாய வெளிவழியே போற்றி ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி ஓம் பார்வதி மய சக்தியே போற்றி ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி ஓம் பிரணவரூப ஒலியே போற்றி ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி ஓம் புவன யோக வீரமே போற்றி ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி ஓம் புத பேத நாசினி போற்றி ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி ஓம் வனநேச பாரிதியே போற்றி ஓம் குண ரூப சாரதியே போற்றி ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி ஓம் டமருகம் தரித்தாய் போற்றி ஓம் சூலமும் கொண்டாய் போற்றி ஓம் பக்தரின் பிரியமே போற்றி ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி ஓம் ராஜராஜ தேவியே போற்றி ஓம் கங்காதர காருண்யே போற்றி ஓம் வித்தைக் கதிபதியே போற்றி ஓம் வித்வ மூல சித்தமே போற்றி ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி ஓம் காமதேனு மடியே போற்றி ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி ஓம் மகாபல மாசக்தியே போற்றி ஓம் மகா பைரவி தேவியே போற்றி ஓம் நலம் தரும் நாயகியே போற்றி ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்

 
 
 ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள
தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்

தேவியின் இம்மூலமந்திரத்தை தினமும் பய பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தை யும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.

பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரீ மஹா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.

ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும்

பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் -
கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் -
ப்ரத் யங்கரே என்று நான்காவது இடைவெளியும் - க்ஷம் - ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம். மூன்று மாத்திரை என்பது மூன்று செகண்டுகள் என்று கொள்ளலாம்.

கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின், இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம். 1. ஜ்ஜம் என்ற சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்திகலையும், 3. கம் என்ற சிருஷ்டி கலையும், 4. த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளது. இந்தக் கலைகள் அக்னி சூரியக் கலைகளில் அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற பெயரை அடைகின்ற தேவி சித்தி, சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர் பெற்று, ஒளி வீசி, பக்த கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரத காளி என்ற திருப்பெயரையும் பெற்று பிரத்தியங்கிரா தேவியாக என்றும் போற்றித் துதிக்கப்படுகிறாள். தனித்து ஏகாந்தமாக புன்னாக மரங்கள் சூழ்ந்த ஸ்தலத்தில் சர்வமங்களம் பொருந்திய காரிண்யை யாக ஒளிவீசுகின்ற மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித்துதித்து புகழும் ,பொருளும் சர்வசம்பத்தும் பெறுவோமாக.