Friday, 21 February 2014

ஜோதிட ஆராய்ச்சி

எவர் பயந்தாங்கொள்ளி?

பலதார யோகம் யாருக்கு?

பெண் ஜாதகத்தின் மர்மங்கள்?

தந்தை மகன் உறவு எப்படி?

எந்த இராசிகாரர்களுக்கு எந்த இடம் நோய்வாய்படும்?

Wednesday, 4 December 2013

ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.

.மூல மந்திரம்


மூல மந்திர மோத லிங்கிலை
        யீவ திங்கிலை நேய மிங்கிலை
        மோன மிங்கிலை ஞான மிங்கிலை  மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
         சார முண்டப ராத முண்டிடு
        மூக என்றொரு பேரு முண்டருள்       பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
        வார்மை யும்பல வாகி வெந்தெழு
        கோர கும்பியி லேவி ழுந்திட          நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
        ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
        கூர்மை தந்தினி யாள வந்தருள்       புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
        சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
        பீதி கொண்டிட வாது கொண்டரு       ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
        மாற னும்பிணி தீர வஞ்சகர்
        பீறு வெங்கழு வேற வென்றிடு        முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
        பாக மொன்றிய வாலை யந்தரி
        ஆதி யந்தமு மான சங்கரி                    குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
        சேவ லங்கொடி யான பைங்கர
        ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள்    பெருமாளே.
-88 பழநி
பதம் பிரித்து உரை


மூல மந்திரம் ஓதல் இங்கு இலை
ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள்

மூல மந்திரம் = மூல மந்திரமாகிய (ஆறெழுத்தை). ஓதல் இங்கிலை = ஓதுவது என்பது என்னிடம் கிடையாது. ஈதல் இங்கிலை =(பிறருக்குக்) கொடுத்தல் என்பதும் என்னிடத்தில் கிடையாது.மோனம் இங்கிலை = மனத்தை அடக்கும் மவுன நிலை என்பது என்னிடம் கிடையாது. ஞானம் இங்கிலை = ஞானம் என்பதும் என்னிடத்தில் இல்லை. மடவார்கள் = மாதர்கள் மீது.

மோகம் உண்டு அதி தாகம் உண்டு
அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத

மோகம் உண்டு = காமம் என்பது என்னிடம் உண்டு. அதி தாகம் =அதில் மிக்க வேட்கை (எனக்கு) உண்டு. அபசாரம் உண்டு = (அதனால் செய்த) அபசாரம் எனக்கு உண்டு. இடு மூகன் என்ற = (எல்லாரும்) இட்ட கீழ்மகன் என்னும். பேரும் உண்டு = பெயரும் எனக்கு உண்டு. அருள் பயிலாத = உனது திருவருளில் பயிலாத.

கோலமும் குண ஈன துன்பர்கள்
வார்மையும் பலவாகி வெந்து எழு
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி

கோலமும் = விளையாட்டுக் கோலமும்.குண ஈன=குணம் இழிவான. துன்பர்கள் = துன்பச் செயலாளர்களின். வார்மையும் =ஒழுக்கமும். பலவாகி = பல கூடி. வெந்து எழு = வெந்து எழுகின்ற. கோர = கோரமான. கும்பியிலே= கும்பிபாகம் என்னும் நரகத்தில்.விழுந்திட = விழுவதற்கே. நினைவாகி = நினைவு கொண்டு.

கூடி கொண்டு உழல்வேனை அன்போடு
ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள் புரிவாயே

கூடு கொண்டு = இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து. உழல்வேனை = திரிகின்ற என் மீது அன்பொடு = அன்பு வைத்து. ஞான நெஞ்சினர் பால் = ஞானம் நிறைந்த மனத்தினருடன் இணங்கிடும் =சேரும்படியான கூர்மை தந்து = நுண்ணறிவை எனக்குத் தந்து. இனி ஆள வந்து = என்னை ஆட்கொள்ள என்னிடம் வந்து. அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.

பீலி வெந்து உயர் ஆலி வெந்து
அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு

பீலி வெந்து = மயில் பீலியும் வெந்து. உயர் ஆல = உயர்ந்த குண்டிகை நீரும் வெந்து கொதித்து. அசோகு வெந்து = அசோகந் தளிர்களும் வெந்து. அமண் மூகர் = (அந்த அவமானத்தால்) சமண்களாகிய ஊமைகள். நெஞ்சிடை பீதி கொண்டிட = மனத்தில் பயம் கொள்ளுமாறு. வாது கொண்டு = வாது செய்து. அருள் எழுது ஏடு = திருவருட் பெருக்கால் (பாசுரம் எழுதிய) ஏடு.

பேணி அங்கு எதிர் அறு சென்றிட
மாறனும் பிணி தீர வஞ்சகர்
பீறு வெம் கழு ஏற வென்றிடு முருகோனே

பேணி = யாவரும் விரும்பும்படி. அங்கு எதிர் ஏறு சென்றிட =(வைகை) ஆற்றில் எதிர்த்துச் செல்லவும். மாறனும் = பாண்டிய மன்னனும். பிணி தீர = நோய் தீர்ந்து குணம் பெறவும். வஞ்சகர் =வஞ்சகர்கள். பீறு = (உடலைக்) கிழிக்கின்ற. வெம் கழு ஏற = கொடிய கழுவில் ஏறவும்.

ஆலம் உண்டவர் சோதி அம் க(ண்)ணர்
பாகம் ஒன்றிய வாலை அந்தரி
ஆதி அந்தமுமான சங்கரி குமரேசா

ஆலம் உண்டவர் = ஆலகால விடத்தை உண்டவரும். சோதி அம் கண்ணர் = முச்சுடர்களை விட அழகிய முக்கண்கள் கொண்டவரும் ஆகிய சிவபெருமானின். பாகம் ஒன்றிய = பாகத்தில் பொருந்திய. வாலை = குமரி. அந்தரி = பராகாச வடிவினள். ஆதி அந்தமுமான =முதலும் இறுதியுமாய் நிற்கும். சங்கரி குமரேசா = சங்கரியின் குமரனே.

ஆரணம் பயில் ஞான புங்கவ
சேவல் அம் கொடி ஆன பைங்கர
ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் பெருமாளே.

ஆரணம் பயில் = வேதங்கள் பயிலும். ஞான புங்கவ = ஞான குருவே.சேவல் அம் கொடி ஆன = அழகிய சேவல் கொடியை ஏந்திய.பைங்கர = திருக் கரத்தனே ஆவினன் குடி வாழ்வு = பழனியில் வாழ்வு கொண்டு. அருள் பெருமாளே = அருள் பாலிக்கும் பெருமாளே.
சுருக்க உரை
நான் மூல மந்திரமாகிய ஆறெழுத்தை ஓதுவது கிடையாது. ஒருவருக்கும் ஈகை செய்வதில்லை. மனத்தில் அன்பும் இல்லை. மவுனமோ, ஞானமோ எனக்குக் கிடையாது. ஆனால் மாதர்கள் மீது மோகம் எனக்கு மிக உண்டு. அபசாரம் மிகச் செய்தவன் நான். எல்லாரும் என்னைக் கீழ்மகன் என்று சொல்லுவதும் சரியே. குணக் கேடர்கள் போகும் கும்பி நரகத்தில் விழுவதற்கே நினைவு கொண்டு, இந்த உடலைச் சுமந்து கொண்டு திரியும் என் மேல் அன்பு வைத்து, இனி என்னை ஆள வந்து அருள் புரிவாயாக.

மயில் பீலியும், தாம் ஏந்திய குண்டிகை நீரும், அசோகந் தளிர்களும் வெந்து, அந்த அவமானத்தால் சமணர்களாகிய ஊமைகள் பயம் கொள்ளுமாறு, சம்பந்தராக வந்து, வாது செய்து, பாசுரங்கள் எழுதிய ஏடுகள் வைகை ஆற்றில் எதிர் ஏற, பாண்டிய மன்னனின் சுரமும், கூனும் நீங்கவும், சமணர்கள் கழு ஏறவும் வெற்றி கொண்ட முருகனே. நஞ்சை உண்ட சிவபெருமான் பாகத்தில் உறையும் சங்கரியின் குமாரனே. வேதங்கள் போற்றும் ஞான குருவே. சேவல் கொடியோனே. பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. ஞானம் நிறைந்த அடியார்களுடன் நான் சேர்ந்து நன்னெறியில் ஒழுக அருள் புரிவாயாக.

குகஸ்ரீ ரசபதி விளக்கவுரை

அமணர் காடு காழியை அடர்ந்தது. அப்பாவத்தால் பாண்டியனை அந்நோய் பாதித்தது. அதைத் தவிர்க் அமணர் எண்ணினர். மந்திரம் கூறி மயிற் பீலியால் மன்னர் உடலை வருடினர். தேகத்தின் மீது கும்பிகை நீரைத் தெளித்தனர். சுர வெம்மையால் சார்ந்த பீலி சாமம்பலாகியது. வளமான கும்பிகை நீர் வற்றியது. கையில் இருந்த அசோக தளிரும் தீந்தது. இறுதியில் திருநீற்றுப் பதிகம் பாடி சுரம் தீர்த்தார் திருஞானசம்பந்தர். கண்ட அமணர் பீதி கொண்டனர். அழிந்தது நமது சமயக் கொள்கை என அலறினர். அருள் நாதம் மெய்மையை அறிவிக்கும். அம்மெய்மையை உள்ளத்தில் அழுத்தி அதை உண்மை ஆக்குவம். உண்மையை வாய் வழி வெளிப்படுத்தி அதை வாய்மை ஆக்குவம். வாய்மையை ஒலி ஆக்குவம். ஒலியை எழுத்தாக்குவோம். எழுத்தை ஏட்டாக்குவோம். தெய்வ அந்த ஏட்டை தீயில் சேர்ப்போம். வேகாத ஏடு வெற்றி பெற்றது என்று வாதத்தை அமணர் வளர்த்தினர். சுர வாதில் தோற்ற அமணர் தூய அனல் வாதிலும் தோற்றனர். மீண்டும் வாதத்தில் முடி சூடலாம் என்று எண்ணினர். புனல் வாதம் செய்வோம், தோற்றவர் கழு ஏற வேண்டும் என்று தம்மைத் தாமே வஞ்சிக்கொண்ட தடுமாற்றத்தால் தம் சமய உண்மை தழுவிய ஏட்டை வெள்ளம் பெருகிய வைகையில் இட்டனர். அந்த ஏட்டை வெள்ளம் அடித்துச் சென்றது.

Ragam Tanam Pallavi

Ragam Tanam Pallavi